ஹப்புத்தளையில் 14 பேருக்கு கொரோனா!

ஹப்புத்தளையில், தொட்டலாகலை, பிட்டரத்மலை ஆகிய இடங்களைச் சேர்ந்த 14 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள் அனைவரும் பலாங்கொடையில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றுகின்றவர்கள் என, ஹப்புத்தளை பிரதேச பொதுசுகாதார பரிசோதகர் ரோய் விஜயசூரிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே குறித்த ஆடைத்தொழிற்சாலையின் பணியாளர் ஒருவருக்கு கொவிட் தொற்றுறுதியாகி இருந்த நிலையில், அவருடன் நிறுவனப் பேருந்தில் ஒன்றாக பயணித்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் 14 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, ஹப்புத்தளை பகுதியில் நேற்று கொவிட் தொற்றின் காரணமாக ஒருவர் உயிரிழந்தார்.

அவர் நேற்று முன்தினம் பங்கெட்டி பிரதேச வைத்தியசாலையில் பற்சிகிச்சை செய்துக் கொண்ட நிலையில், அவருக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர் மற்றும் தாதியர் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here