இன்று முதல் 5000!

நாட்டில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக 5,000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (புதன்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது.

பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கே இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக சுமார் 30 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேநேரம், முதியோர் கொடுப்பனவு, விவசாய, கடற்றொழில் ஓய்வூதிய சம்பளம், சமூர்த்தி பயனாளர்களுக்குமான கொடுப்பனவு என்பனவும் வழங்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here