கொழும்பு நகருக்குள் பிரவேசிக்க விசேட வழிமுறை!

கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, கல்கிஸ்ஸை மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் வைத்து இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன.

அத்தோடு, இந்த ஸ்டிக்கர்கள் ஒருநாள் மாத்திரமே செல்லுபடியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே வாகனம் பலமுறை சோதனைக்கு உள்ளாக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் சில சந்தர்ப்பங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் சில வாகனங்கள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here