இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இருந்து குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

உடப்பு காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட கொத்தாந்தீவு கிராமத்தில் கைவிடப்பட்டுள்ள இறால் பண்ணை நீர்த் தொட்டிக்குள் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அப்புத்தளை வெரகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 30 வயதுடைய இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

முந்தல் – கொதத்தாந்தீவு பகுதியிலுள்ள இறால் பண்ணை ஒன்றுக்கு வேலை செய்யும் நோக்கில் கடந்த 27 ஆம் திகதி அப்புத்தளை வெரகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த நபர் நேற்று (28) வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போயிருந்த நிலையில் இன்று (29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளம் குடும்பஸ்தரின் சடலம் கைவிடப்பட்டுள்ள இறால் பண்ணை நீர்த்தொட்டிக்குள் மிதிந்து கொண்ருந்ததை அவதானித்த இறால் பண்ணை ஊழிர்கள் இதுதொடர்பில் காவற்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த தகவலின் அடிப்படையில் அங்கு வருகை தந்த உடப்பு காவற்துறையினரும், காவற்துறை தடயவியல் பிரிவினரும் கள விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன், உயிரிழந்த இளம் குடும்பஸ்தரின் சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here