கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள் ! சந்தேக நபர்கள் மூவர் கைது

கடந்த 30.12.2020 அன்று முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவல்காட்டு கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து மனித எச்சங்கள் மீட்கப்பட்டிருந்தன.

குறித்த பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முள்ளியளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.அன்வர்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வந்தனர்.

அதன்படி, குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களாக இனம் காணப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை முள்ளியளை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். உயிரிழந்த நிலையில் மனித எச்சங்களாக மீட்கப்பட்டவரின் மனைவி, உயிரிழந்தவரின் நண்பர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொன்னகர் பகுதியினை சேர்ந்த இருவரும் கேப்பாபிலவினை சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதோடு, இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here