தனியார் மது விடுதி முழுமையாக தீயில் எரிந்து நாசம்

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மது விருந்தகத்தில் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடிரேன தீப்பற்றி எறிந்தமையினை அடுத்து தீயணைப்பு பிரிவினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த பகுதியில் வெளியில் சத்தம் கேட்டதினை அவதானித்த அயலவர்கள் வெளியில் சென்று பார்வையிட்ட சமயத்தில் குறித்த மதுபானசாலையில் தீப்பற்றியேறிந்தமையினை அவதானித்துள்ளனர். அதனையடுத்து உடனடியாக செயற்பட்ட அயலவர்கள் நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் ஒரு மணிநேர போராட்டத்தின் பின்னர் தீயிணை சிறிதளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் கட்டிடத்தின் மேல்ப்பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மேலும் விரைந்து செயற்பட்ட இலங்கை மின்சார சபையினர் குறித்த பகுதிக்கான மின்சாரத்தினை துண்டித்துள்ளதுடன் பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மதுபானசாலை கட்டிடத்தினுள் இருந்து வெடிச்சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளமையினால் தீயினை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here