4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு

யாழ். ஊர்காவற்றுறையில் 4 வயது சிறுவன் ஒருவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.

ஊர்காவற்றுறை – நாரந்தனை வடக்கில் நேற்று (10) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் விஜயேந்திரன் ஆரணன் (வயது 4) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

சிறுவனின் தந்தை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் காணாமல் போயுள்ளான். இதனையடுத்து பெற்றோர் தேடிய நிலையில், சிறுவன் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளான். இச் சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றறை காவற்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here