மில்லில் விஷ வாயு கசிவு… 6 பேர் பலி…

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சச்சின் ஜிஐடிசி பகுதியில் உள்ள விஸ்வ பிரேம் டையிங் அண்ட் பிரின்டிங் தொழிற்சாலையில் இன்று (6ம் தேதி) அதிகாலை 4.25 மணி அளவில் விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. அப்போது, பணியில் இருந்த 6 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாதிக்கப்பட்ட 20 பேர் உடனடியாக சூரத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷ வாயு கசிவு குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here