மருதமுனை மற்றும் பாலமுனை பிரதேச வைத்தியசாலைகள், கொவிட் நோயாளர்களின் பராமரிப்பு சேவையில் இருந்து, பொது வைத்திய சேவைக்கு மீள மாற்றப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.
இந்த இரண்டு வைத்தியசாலைகளும், புத்தாண்டு முதல் சாதாரணமான வைத்திய சேவையை வழங்கி வருகின்றன.
எனவே, மருதமுனை மற்றும் பாலமுனை பிரதேச வைத்தியசாலைகளில், பொதுமக்கள் பொது வைத்திய சேவையை வழமைபோல பெற்றுக்கொள்ள முடியும் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்துள்ளார்.