எம்.ஏ.சுமந்திரன் எம்.பி முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் உண்மையை சொல்ல தயங்கப் போவதில்லை – ஹரீஸ் எம்.பி

நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாக இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஒளடத இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லையென அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பயன்படுத்தப்படும் மருந்துகளில் 80 சதவீதமானவை இறக்குமதி செய்யப்படுகின்றன.

எமது செய்திச் சேவையின் ஆய்வுகளின் படி, நாட்டில் தற்போது ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்கிற விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

எனினும், இறக்குமதிக்கான தடைகளை உடனடியாக நீக்காவிடின் பல அத்தியாவசிய மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here