ஐ.சி.சி உலக கிண்ண தொடரில் பங்கேற்க இலங்கை இளையோர் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு விஜயம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை இளையோர் கிரிக்கெட் குழாம், 19 வயதிற்குட்பட்ட ஐ.சி.சி உலக கிண்ண தொடரில் பங்கேற்பதற்காக மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளது.

17 பேர் கொண்ட இலங்கை இளையோர் குழாம், ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி உலக கிண்ண கிரிக்கட் தொடரில் இலங்கை இளையோர் அணி ‘ஏ’ குழுவில் விளையாடவுள்ளது.

இந்த குழுவில் அவுஸ்திரேலியா, ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளை இலங்கை எதிர்கொள்ளவுள்ளது.

இதற்கமைய, இந்த தொடரில் ஸ்கொட்லாந்து அணியை எதிர்வரும் 14ஆம் திகதி இலங்கை இளையோர் அணி முதலாவதாக எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here