பிரேஸிலில் வெள்ளப்பெருக்கு

பிரேஸிலின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக குறைந்தது 18பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 280க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

35,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று பாஹியாவின் சிவில் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது,

பாஹியா மாநிலம் முழுவதும் உள்ள கிட்டத்தட்ட 40 நகரங்களை வெள்ளம் பாதித்துள்ளது என்று ஆளுநனர் ரூய் கோஸ்டா ஊடகங்களிடம் கூறினார்.

பிரேஸிலின் வானிலை மற்றும் இயற்கை பேரிடர் கண்காணிப்பு முகவர் பாஹியாவில் கூடுதல் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது. குறைந்தபட்சம் செவ்வாய்கிழமை வரை மழை நீடிக்கும் என்று ஏஜென்சியா பிரேஸில் தெரிவித்துள்ளது.

இதம்பே நகரில், கனமழை காரணமாக சனிக்கிழமை பிற்பகுதியில் ஒரு அணை உடைந்தது. மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்ற அச்சத்தையும் கவலையையும் எழுப்புகிறது என்று தேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும், கனமழை தொடர இருப்பதால் மீட்புப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாக அம்மாகாண ஆளுநர் ரூய் கோஸ்டா தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here