அம்பாறை – திருக்கோவில் காவல் நிலையத்தில் 4 காவல்துறை அதிகாரிகளின் உயிரை பறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் எத்திமலை காவல்துறையில் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து, அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று (24) இரவு 10 மணியளவில் திருக்கோவில் காவல் நிலையத்தில் குறித்த நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 4 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.