அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் மரணமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேநேரம் நிலையப் பொறுப்பதிகாரி துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தோடு மேலும் சில பொலிசாரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பாண்டிருப்பைச் சேர்ந்த தமிழ் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச்சூடு நடைபெற்ற காரணம் குறித்து இன்னும் உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது