போதை வியாபாரியை துரத்திச் சென்ற பொலிஸ் அதிகாரி மரணம்!

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியொருவர் நேற்றிரவு (16) போதை வியாபாரி ஒருவரை துரத்தி பிடித்த போது தவறி விழுந்து மரணமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்போது கஜ்ஜி முகமது தாரிக் வயது 49 என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தெரியவருவதாவது,

தம்பலகாமம் பொலிஸாருக்கு ஹோரொயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து சந்தேக நபர்களை முள்ளிப்பொத்தானை என்ற இடத்தில் கைது செய்ய முற்பட்ட போதே இவ் மரணம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர் கந்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மரணம் குறித்து மேலதிக விசாரணை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here