12 தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

அக்கரப்பத்தனை பெருந்தோட்ட கம்பனிக்கு கீழ் இயங்கும் 12 தோட்டங்களை கொண்ட 42 பிரிவுகளை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள், தொழிலுக்குச் செல்லாமல் இன்று (திங்கட்கிழமை) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்ட ஆயிரம் ரூபாய் சம்பளம் பாரிய பிரச்சினையாக இருப்பதாகவும் தற்போது தேயிலை மலைகள் காடாகி கிடப்பதால் 20 கிலோ கொழுந்து பறிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தே இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களே வேலை வழங்குவதனால், பெரும் சிரமத்திற்கு மத்தியில் நிம்மதியற்று வாழ்ந்து வருகின்றோம் என தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

ஆகவே பேச்சுவார்த்தையில் ஈடுபடும் தொழிற்சங்கங்கள், தமக்கு சாதகமான பதிலை பெற்றுத் தருமாறு கோரியும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க, கூட்டு ஒப்பந்தம் கட்டாயமாக வேண்டும் என வலியுறுத்தியும் இந்த பணி பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பணிப்பகிஷ்கரிப்பினால்,  தேயிலை தொழிற்சாலைகளும் மூடப்பட்டு, தொழிற்சாலை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here