எரிவாயு அடுப்புகள் வெடித்த சம்பவங்கள் 5 பதிவு

நுவரெலியா நகரம் மற்றும் நுவரெலியா மாகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் நேற்று (07) மதியம் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கேஸ் அடுப்பு வெடித்ததால், கேஸ் அடுப்பு பலத்த சேதம் அடைந்தது.

இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் நுவரெலியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை, நானுஓயா எடின்புரோ தோட்டத்திலும், பூண்டுலோயா ஹெரோ தோட்டத்திலும், ஹட்டன் வெளிஓயா மேற்பிரிவு தோட்டத்திலும் நேற்று (07) எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here