அடுத்த மாதம் இந்தியா பயணமாகிறார் ஜனாதிபதி!

13

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகரில் அமைக்கப்பட்டுள்ள புதிய விமான நிலையத்தினை எதிர்வரும் 20ஆம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கவுள்ளார்.

இதன்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அரசதரப்பின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பௌத்த தேரர்கள், யாத்திரீகர்கள் உள்ளடங்கலாக 125பேர் கொண்ட குழுவினருடன் இலங்கையிலிருந்து குறித்த விமான நிலையத்திற்கு செல்லவுள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் டெல்லியில் இருந்து குஷிநகரில் தரையிறங்குவார் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான குழுவினர் கொழும்பிலிருந்து நேரடியாக குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தில் அதே நாளில் திறங்குவார்கள். அன்றைய தினம் குஷிநகரில் தரையிறங்கும் முதல் சர்வதேச விமானமாக இலங்கை விமானமாக இருக்கும்.

பல வெளிநாடுகளின் தூதர்களும் அந்த நாளில் குஷிநகரில் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக பௌத்த மக்கள்தொகை கொண்ட நாடுகளின் அதிகாரிகள் வரவுள்ளனர். சீனாவும் ஒரு இராஜதந்திரியை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் காணப்படுகின்ற சமய மற்றும் கலாசார இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் முகமாகவே அங்குரார்ப்பண நிகழ்விற்கு இலங்கையிலிருந்து முதலாவது விமானம் அழைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஷிநகர் விமான நிலைய கட்டுமானம் 100 நாட்களில் அமைக்கப்பட்டது. HTS TentiQ Aluminium Frame Rapid Structure தொழில்நுட்பம். .

குஷிநகர் என்பது புத்த பெருமான் தனது எண்பதாவது அகவையில் பரிநிர்வாணம் அடைந்த நகரம். கோரக்பூரிலிருந்து கிழக்கே 53 கி மீ தொலைவில் அமைந்துள்ளது. குசிநகரம் அனைத்துலக பௌத்தர்களின் புனித தலமாக விளங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here