விஜய்யுடன் மூன்றாவது முறையாக இணையும் கீர்த்தி!

21

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம்  ‘பீஸ்ட்’.
படப்பிடிப்பு  விறுவிறுப்பாக நடந்து வருகிறது.


பீஸ்ட் படத்திற்கு பின்னர்   தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பல்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.


தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள இந்தப் படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.


படத்தின் நாயகி யார் என்பது குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தற்போது விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக  தகவல்கள் கசிந்துள்ளன.

‘பைரவா’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ் மூன்றாவது முறையாக மீண்டும் விஜயுடன் இணையவுள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here