கதைத் திருட்டில் சிக்கிய திரைப்படம்

17

சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் தயாரிப்பில் உருவான ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ திரைப்படம் கடந்த மாதம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகியிருந்தது.

புதுமுக இயக்குனர் அரிசில் மூர்த்தி இயக்கத்தில் உருவான இப்படம் தற்போது கதை திருட்டில் சிக்கியுள்ளது.

ஆம், கடந்த 2016-ம் ஆண்டு மராத்தி மொழியில் வெளியான ‘ரங்கா படாங்கா’ படத்தின் கதையை தழுவி தான் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’ படம் எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த விஷயம் நடிகர் சூர்யாவிற்கு தெரியவர அவர் இயக்குனரை அழைத்து விசாரித்துள்ளார். இதையடுத்து சம்மந்தப்பட்ட மராத்தி படத்தின் குழுவினரை அழைத்து அவர்களுக்கு உரிய தொகையை நஷ்ட ஈடாக கொடுத்து இருக்கிறார் சூர்யா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here