ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில் டோனியே சிறந்தவர்: ரிக்கி பாண்டிங்

25

கடைசி நேரத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் டோனியே சிறந்தவர் என ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லி கேபிடல்ஸ் அணிக்குக்கு எதிரான நேற்றய ஆட்டத்தில் தன்னுடைய  சிறப்பான பேட்டிங் மூலம் அணியை வெற்றி பெறச்செய்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் டோனி. ஐ.பி.எல் குவாலிபையர் முதல் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் 172 ரன்கள் சேர்த்தது. சேஸிங்கில் 11 பந்துகளில் 24 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கிய டோனி, 1 சிக்ஸர், 3 பவுண்டரி உள்பட 6 பந்துகளில் 18 ரன்கள் விளாசி சென்னையின் வெற்றியை உறுதி செய்தார்.

இதன்மூலம், 9-வது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ். இதையடுத்து, சமூக ஊடகங்களில் பாராட்டு மழையில் நனையத் தொடங்கினார் டோனி. 

இதுகுறித்து டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், கடைசி நேரத்தில் ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைப்பதில் டோனியே சிறந்தவர் என கருதுகிறேன். 
ஏனெனில் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் பேட்ஸ்மேன்கள் அனைவருக்கும் மன அழுத்தம் தொற்றிக்கொள்ளும். ஆனால் டோனியோ எவ்வித அழுத்தம் இன்றி தனது அணிக்கு வெற்றியை கொடுத்துள்ளார். அவர் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்பும், அவரது கடைசி நேர பேட்டிங் திறமை நிச்சயம் நினைவுகூறப்படும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here