அன்று பாணுக்கு வரிசையில் – இன்று பால்மாவுக்கு

22

சினிமோவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலப்பகுதியில் பாணுக்கு வரிசையில் நின்ற நாட்டுமக்கள் இன்று 40வருட த்திற்கு பிறகு இன்று பால்மாவிற்கும் மக்கள் வரிசையில் நிற்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதகிருஸ்னண் தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை ஹட்டனில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்னண், இந்த அரசாங்கம் பல கபலிகரமான விடயங்களை செய்துவருகிறது முதலில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியது உதாரனமாக எரிவாயு, பால்மா, கோதுமை மா போன்ற பொருட்களுக்கு தட்டுபாட்டை ஏற்படுத்தி சந்தையில் அதனை இல்லாது போல் செய்து அந்த நிருவனங்களின் ஊடாக குறித்த பொருட்களை அதிக விலைக்கு விற்ககூடிய சூழ்நிலையினை உருவாக்கியுள்ளது.

மக்கள் பொருட்களை கொள்வனவு செய்யவேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர விலையஅதிகரிப்பை பற்றி சிந்திப்பதில்லை சில பொருட்களுக்கு கட்டுபாட்டு விலை இல்லை என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது

இன்று அரிசிக்கு கட்பாட்டு விலை கிடையாது, எரிவாயிக்கு கட்டுபாட்டுவிலை கிடையாது. பால்மாவுக்கு கட்டுபாட்டுவிலை கிடையாது, அரசாங்கம் அவர்களுக்கு கீழ் செயற்படுகின்ற சூழ்நிலையே காணப்படுகிறது. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரியாமல் இருக்கிறார்கள் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் மோசமான நிலையில் வாழ்கிறார்கள் இன்று அனைத்து பொருட்களின் விலையும் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

அனைத்து பொருட்களையும் இந்த அரசாங்கம் கொண்டுவர நினைத்தாலும் அரசாங்கத்திடம் டொலர்கள் இல்லை டொலர் இல்லாவிட்டால் மீண்டும் பால்மா, கேஸ், சீமெந்து ஆகிய விலைகள் அதிகரிக்கும், வாழ்க்கை செலவு இனி குறையாது இதற்கு கடவுளை நம்பவும் முடியாது அன்று ஐந்து ரூபாவுக்கு ஒரு ராத்தல் பானை கொள்வனவு செய்த காலத்தை மீண்டும் திரும்பி பார்க்க முடியாது.

நாட்டில் உரத்திற்கும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது நுவரெலியா மாவட்டத்தில் தேயிலைக்கு கூட போதுமான உரம் கிடைப்பதில்லை இவ்வாறு சென்றால் தேயிலைதுறையும் விழ்ச்சியடையும் பெருந்தோட்ட நிருவனங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை வழங்காது. அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் வாசுதேவ நானயகாரவும் வீதிக்கு இறங்கி ஆர்பாட்டத்தில் ஈடுபடுவதாக கூறியிருக்கிறார் அவ்வாறு இறங்கினால் நாங்களும் அவருக்கு நிச்சயமாக ஆதரவினை வழங்குவோம் மாகாணசபை தேர்தல் பலய முறையில் நடாத்தப்பட வேண்டமென நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

நாட்டில் இருக்கின்ற இனப்பிரச்சினை மற்றும் 13வது திருத்தத்தை வழுபடுத்தவும் இந்த மாகாணசபை தேர்தல் முக்கியமானதாகும். இதில் இந்தியாவின் அழுத்தமும் ஒரு முக்கிய காரணமாகும் என குறிப்பிட்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here