அஸ்வினுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட விவகாரம்: மோர்கன் மீது சேவாக் பாய்ச்சல்

33

ஷார்ஜாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீழ்த்தியது .
இதில் டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. கொல்கத்தா வீரர் வெங்கடேஷ் வீசிய 19-வது ஓவரின் கடைசிப் பந்தை ரிஷப்பந்த் எதிர் கொண்டார். பந்த் தட்டிவிட்டு ஒரு ரன் எடுக்க ஓடும்போது, திரிபாதி பீல்டிங் செய்து பந்தை எறிய அது ரிஷப்பந்தின் உடலில் பட்டுச் சென்றது. இதைப் பார்த்த அஸ்வின் 2-வது ரன் ஓடினார்.பொதுவாக பீல்டர் பந்தைப் பிடித்து எறியும்போது பேட்ஸ்மேன் உடலில் பட்டுவிட்டால் அடுத்த ரன் ஓடமாட்டார்கள். இது கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் மரபாகும்.
டிம் சவுதி வீசிய 20ஓவரின் முதல் பந்தில் அஸ்வின் 9 ரன்னில் ராணாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது அஸ்வின் வெளியேறும்போது சவுதி அஸ்வினைப் பார்த்து ஏதோ கூறினார், அதற்கு அஸ்வின் பதிலுக்கு ஏதோ கூற வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப் பார்த்த கேப்டன் மோர்கன் வந்து அஸ்வினுடன் வாக்குவாதம் செய்தார். இதைப் பார்த்த விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக், நடுவர்கள் அஸ்வினை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தார்.
மோர்கனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட அஸ்வின் செயல் அவமானகரமானது என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்  ஷேன் வார்னே விமர்சித்து இருந்தார்.  இந்த நிலையில்,  மோர்கனை கடுமையாக வறுத்தெடுத்துள்ள சேவாக், 2019- உலக கோப்பை இறுதிப் போட்டியில், குப்தில் த்ரோ செய்த பந்து பென்ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு  பவுண்டரிக்கு சென்ற நிகழ்வை சுட்டிக்காட்டி சாடியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here