மட்டு. ஊடகவியலாளர் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணை

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் இன்று மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியலய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.


இன்று காலை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.


இன்று காலை 9.30மணி தொடக்கம் 11.30மணி வரையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.


கடந்த ஆண்டு கடலில் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டமை குறித்து தம்மிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளே இவ்வாறான விசாரணைகள் என இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன் தெரிவித்தார்.


ஊடகவியலாளர்கள் சுதந்திரமான தமது கடமையினை செய்யும் நிலைமையினை ஏற்படுத்த ஜனாதிபதி முன்வரவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.


கொரனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here