தமிழ் தேசியம் தடம்புரள கூடாது – வியாழேந்திரன்

48

எமது தமிழ் தலைமைகளால் பிரச்சினையை மாத்திரம் தான் சொல்ல முடியும். 72 வருடங்கள் அல்ல 700 வருடங்கள் சென்றாலும் எமது மக்களுக்கான பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியாது என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக “ஒரு இலட்சம் கிலோ மீற்றர் வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தினூடாக ஆயித்தியமலை மணிபுரம் தணிகாச்சலம் வீதியினை கொங்கிறீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில் ஒரு வலிமையான அரசியல் கட்டமைப்பை ஏற்படுத்தி கிழக்கு தமிழ் மக்களின் இருப்பை உறுதிப்படுத்துகின்ற அரசியல் பயணத்தில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற உரிமை சார்ந்த விடயங்களில் நாங்கள் சாணக்கியமாக ராஜதந்திரமாக நகர்த்துவோம்.அபிவிருத்தி சார்ந்த விடயங்களையும் தொடர்ந்தும் முன்னெடுப்போம்.

எமது தமிழ் தலைமைகளால் பிரச்சினையை மாத்திரம் தான் சொல்ல முடியும்.72 வருடங்கள் அல்ல 700 வருடங்கள் சென்றாலும் எமது மக்களுக்கான பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க இவர்களால் முடியாது. ஆண்டாண்டு காலமாய் அதே பொய் அதே பித்தலாட்டம்.எனக்கு வாக்களித்த அந்த 34 ஆயிரம் மக்களால் தான் இந்த மாகாணத்திற்கு இந்த மாவட்டத்திற்கு ஒட்டுமொத்த மக்களுக்கும் இன்று நல்லது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.

அதனால் தான் அந்த 34 ஆயிரம் பேரையும் என்னால் மறக்க முடியாது. அந்த 34 ஆயிரம் பேர் இல்லாவிட்டால் இந்த மாகாணத்துக்கு ஒரு இராஜாங்க அமைச்சரை இந்த மாவட்டத்துக்கு ஒரு இராஜாங்க அமைச்சரை, உங்கள் முன்னால் சதாசிவம் வியாழேந்திரன் இல்லை. தமிழ் தேசியம் என்பது தடம் மாறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here