உடல்நலம் பாதிப்பா? – நடிகர் ராமராஜன் தரப்பு விளக்கம்

8

பிரபல நடிகரும், இயக்குனருமான ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்காக தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜொலித்தவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவை விட்டு விலகி இருப்பதால், அவ்வப்போது அவரது உடல்நிலை பற்றி சில வதந்திகள் பரவி வருகின்றன. அந்த வகையில் தற்போதும் அவரது உடல்நிலை பற்றி சமூகவலைதளங்களில் வதந்தி பரவின. இதற்கு ராமராஜன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

அவர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராமராஜனைப் பற்றி தற்சமயம் தவறான வதந்தியை பரப்பி வருகின்றார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். அவர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார்.

2 படங்களுக்கு தனது கதையைத் தந்துள்ள ராமராஜன், அடுத்ததாக இரண்டு படங்களில் நடிப்பதற்காகவும் தன்னை தயார்படுத்தி வருகிறார். நடிகர் ராமராஜன் உடல் நலத்துடனும், மனவலிமையுடனும் இருக்கிறார். விரைவில் அவர், தான் நடிக்கும் படத்தின் துவக்க விழாவில் கலந்து கொள்வார்’” என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here