விராட் கோலியை முந்திய குப்தில்

12

டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் முன்னாள் தலைவர் விராட் கோலி, 87 போட்டிகளில் விளையாடி 3,227 ஓட்டங்கள் எடுத்து முதலிடம் வகித்தார். இதில் 29 அரை சதங்கள் அடங்கும்.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 31 ஓட்டங்களில் அவுட்டானார். அவர் டி20 கிரிக்கெட்டில் 107 போட்டிகளில் விளையாடி 3,248 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இதில் 2 சதம், 19 அரை சதங்கள் அடங்கும். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலியை முந்தி கப்தில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here