முச்சகரவண்டி வீதியை விட்டு விலகியதில் ஒருவர் பலி

4

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

ஹட்டன் டிக்கோயா பகுதியிலிருந்து டிக்கோயா பெரிய மணிக்வத்தை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த முச்சக்கர வண்டி நேற்று (24) இரவு 7 மணியளவில் பெரிய மணிக்வத்தை தோட்டத்திற்கு செல்லும் வீதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டி சாரதிக்கு முச்சக்கரவண்டியை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் டிக்கோயா பெரிய மணிக்வத்தை பகுதியை சேர்ந்த சுந்தராஜ் (வயது – 65) மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

படுங்காயமடைந்த மூவரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here